தாய்லாந்தில் தஞ்சமடைந்துள்ள 18 வயதான சவூதிப் பெண்ணான றஹாப் மொஹமட் அல்-கு ன்( Rahaf al-Qunun) க்கு அகதி அந்தஸ்தை உறுதிப்படுத்தியுள்ள ஐக்கிய நாடுகள் சபை அவருக்கான அகதி அந்தஸ்தை வழங்குவது குறித்துப் பரிசீலிக்குமாறு, அவுஸ்திரேலிய அரசாங்கத்திடம் உத்தியோகபூர்வமாக கோரிக்கை விடுத்துள்ளது.
கடந்த வாரயிறுதியில், தாய்லாந்தின் பாங்கொக்கை சென்றடைந்த றஹாப் தனது குடும்பத்தினரால் தனது உயிருக்கு அச்சுறுத்தல் காணப்படுகிறது எனத் தெரிவித்து அவுஸ்திரேலியாவுக்குச் சென்று, அங்கு அகதி அந்தஸ்துக் கோரத் திட்டமிட்ட போது தாய்லாந்து அதிகாரிகளால் தடுத்துவைக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், றஹாபின் அகதி அந்தஸ்துக் கோரிக்கையை ஏற்க வேண்டுமென்ற அழுத்தங்கள் அவுஸ்திரேலியாவுக்கு வழங்கப்பட்ட நிலையில், ஐ.நாவினால் அகதி அந்தஸ்துக்காகப் பிரசீலிக்கப்பட்டால், அவரைக் குடியமர்த்துவது பற்றி ஆராயவுள்ளதாக, அவுஸ்திரேலியா அறிவித்திருந்தது.
இந்நிலையிலேயே, ஐ.நாவால், றஹாபின் அகதி அந்தஸ்துக் கோரிக்கை தமக்கு அறிவிக்கப்பட்டுள்ளதென அவுஸ்திரேலிய உள்நாட்டுப் பாதுகாப்புத் திணைக்களம் அறிவித்துள்ளது.
குவைத்துக்குச் சென்றிருந்த போது, தனது குடும்பத்திடமிருந்து தப்பியோடிய இப்பெண் தனது குடும்பத்திடமிருந்து உடல், உள சித்திரவதைகளை எதிர்நோக்குவதாகத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.