மக்களுக்கு சேவையாற்ற உத்தியோகத்தர்கள் றக்பி வீரர்கள் போன்று இருக்க வேண்டுமே தவிர கோல்ப் வீரர்கள் போன்றல்ல – ஆளுநர் சுரேன் ராகவன்
வடக்கு மாகாணத்தின் புதிய ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் இன்று 10-01-2019 கிளிநொச்சி மாவட்டச் செயலகத்திற்கு சென்றிருந்தார் காலை பத்து மணிக்கு கிளிநொச்சிக்கு சென்ற அவர் மாவட்டத்தின் வெள்ளம் அனர்த்தம் தொடர்பில் அதிகாரிளிடம் கேட்டறிந்துகொண்டார். மேலும் வெள்ளத்திற்கு பின்னராக மேற்கொள்ளப்பட்டு வருகின்ற பணிகள், மற்றும் தேவைகள் தொடர்பிலும் கேட்டுக்கொண்டார்
கிளிநொச்சியில் இராணுவம், மற்றும் அதிகாரிகள் பொது மக்கள் ஆகியோர் இணைந்து மேற்கொண்ட பணிகள் காரணமாக உரிழப்புக்கள் மற்றும் பாரிய அழிவுகளில் இருந்து மக்களை காப்பாற்ற முடிந்திருக்கிறது அதற்காக அனைவருக்கும் நன்றி கூறுவதாகத் தெரிவித்த அவர், கிளிநொச்சிக்கான சவால்கள் இன்னும் தீர்ந்துவிடவில்லை. அவற்றை நாம் எதிர்கொள்ள வேண்டும். அத்தோடு எல்லாத் திணைக்கள அதிகாரிகளுக்குமிடையே ஒருங்கிணைப்பு ஒத்துழைப்பு இருக்கவேண்டும் ஒருவர் செய்கின்ற பணி இன்னொருவருக்கு தெரியாது இருக்கிறது. இது கவலைக்குரியது.
உத்தியோகத்தர்கள் றக்பி வீரர்கள் போன்று இருக்க வேண்டும், கோல்ப் வீரர்கள் போன்று அல்ல. எனக் குறிப்பிட்ட அவர் கோல்ப் விளையாட்டு வீரர்கள் போன்று நாகரீகமாக உடையணிந்து, கணவான்கள் போன்று இருந்தால் மக்களுக்கு பணியாற்ற முடியாது எனக் குறிப்பிட்டார்.
தமிழ் மொழி எங்கள் அடையாளம் பத்தாயிரம் வருடங்கள் பழமைவாய்ந்த மொழி உலகில் உள்ள மூத்த பத்து மொழிகளில் தமிழ் மொழியும் ஒன்று. இதனை ஹவார்ட் பல்கலைகழகமும் ஆராச்சி மூலம் உறுதி செய்திருக்கிறது. என்றும் குறிப்பிட்டார்.
மேலும் ஆளுநர் தலைமையிலான குழுவினர் பன்னங்கண்டி பிரதேசத்திற்கு சென்று அங்கு வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள நிலைமைகளையும் நேரில் ஆராய்ந்துள்ளனர்.
இக் கலந்துரையாடலில் மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம், ஆளுநரின் செயலாளர் இளங்கோவன், பிரதேச செயலாளர்கள் பிரதேச சபை தவிசாளர்கள் திணைக்கள் அதிகாரிகள் , பொலீஸ் அத்தியட்சர் ஆகியோர் கலந்துகொண்டனர்.
வடக்கு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் இன்று (10.01.19) காலை கிளிநொச்சிக்கு சென்றுள்ளார். கிளிநொச்சி அரசாங்க அதிபர் பணிமனைக்கு சென்ற ஆளுநரை அரசாங்க அதிபர் உள்ளிட்ட பணிக்குழாமினர் வரவேற்றனர்.
நேற்று உத்தியோகபூர்வமாக கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்ட ஆளுநர் கிளிநொச்சிக்கு செல்லும் முதலாவது சந்தர்ப்பம் இது என்பதோடு, இதன்போது கிளிநொச்சி மாவட்ட நிலைமைகள் தொடர்பிலும் அரச அதிகாரிகளுடன் ஆராய்ந்தார்.
இதில் முக்கியமாக கிளிநொச்சியில் அண்மையில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தின் பின்னரான நிலைமகள் தொடர்பில் விரிவாக ஆராய்ந்ததுடன் கிளிநொச்சி மாவட்டத்தின் ஏனைய பல விடயங்கள் தொடர்பிலும் ஆராய்ந்தார். ஆளுநருடைய செயலாளர் எல்.இளங்கோவனும் ஆளுநரின் இந்த கிளிநொச்சி பயணத்தில் உடனிருந்தார்.