Home இலங்கை வருமானம் கிடைத்தும் வீதி புனரமைக்கப்படவில்லை….

வருமானம் கிடைத்தும் வீதி புனரமைக்கப்படவில்லை….

by admin

மாந்தை மேற்கு பிரதேச மக்கள் குற்றச்சாட்டு  – குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…


மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்கு உற்பட்ட இலுப்பைக்கடவை, ஆத்திமோட்டை, கூராய், போன்ற பகுதிகளில் உள்ள பிரதேச சபைக்கு சொந்தமான உள்ளக வீதிகளின் நிலமை மிக மோசமாக காணப்படுவதாகவும் பிரதேச சபை பாராமுகமாக செயற்படுவதாகவும் மாந்தை மேற்கு பிரதேச மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

மன்னார் மாவட்டத்தில் மிக பின் தங்கிய நிலையில் யுத்தத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட கிராமங்களான கூராய்,சீது விநாயகர் களம், ஆத்திமோட்டை, இலுப்பைக்கடவை ஆகிய கிராமங்களின் உள்ள உள்ளக வீதிகள் மிகவும் மோசமான நிலையில் காணப்படுகின்றது.

குறித்த பகுதிகளில் இருந்து மாத்திரம் மாதம் ஒன்றுக்கு மண் அகழ்வுகளில் இருந்து பல இலட்சம் ரூபாய் வருமானம் மாந்தை மேற்கு பிரதேச சபைக்கு கிடைத்தாலும் குறித்த வீதியினை புனரமைப்பதில் பிரதேசமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

மேலும் மாந்தை மேற்கு பிரதேச சபை அக்கரை குறித்த கிராமங்களின் வீதி அபிவிருத்தி தொடர்பில் அக்கரை செலுத்தவில்லை என மாந்தை மேற்கு பிரதேச சபை உறுப்பினர் எம்.விஜயபாகு குற்றம் சுமத்தியுள்ளார்.

மணல் அகழ்வில் ஈடுபடும் கனரக வாகனங்களினாலும் மழை காரணமாகவும் வீதிகள் பயணிக்க முடியாத நிலையில் காணப்படுகின்றது. அத்துடன் குறித்த கிராமங்களை சேர்ந்த மக்கள் விவசாயத்தை வாழ்வதாரமாக கொண்ட மக்கள் என்பதால் விவசாய நடவடிக்கைகளுக்கு தேவையான இயந்திர உபகரணங்களை கூட கிராம பகுதிக்குள் கொண்டு செல்ல முடியாத அளவுக்கு வீதிகள் மோசமாக காணப்படுகின்றது .குறித்த கிராம பகுதிகளில் அதிகம் பாம்புகள் காணப்படுவதனால் பாம்புக்கடிகளோ அல்லது எந்த ஒரு மருத்துவ தேவைக்கோ குறித்த வீதிகளை மாத்திரமே பயன்படுத்த வேண்டியுள்ளது.

ஆனலும் வீதி ஒழுங்கான நிலையில் இல்லமையினால் மக்கள் மருத்துவம் மற்றும் அடிப்படை தேவைகளை கூட நிறைவேற்ற முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
எனவே பிரதேச தவிசாளர் மற்றும் பிரதேச சபை குறித்த பிரச்சினைகளை கருத்தில் கொண்டு விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு குறித்த பிரதேச மக்கள் சார்பாக அவர் கோரிக்கை விடுத்துள்ளனர்.மக்களின் பிரச்சினை தொடர்பாக மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளரை வினவிய போது உரிய பதில் எதனையும் வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More