குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
மன்னார் மாவ ட்டத்தில் கைப்பற்றப்பட்டு வரும் கேரள கஞ்சா தொடர்பில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுப்பதற்கு தொடர்ச்சியாக ஊடகவியலாளர்களுக்கு மன்னார் காவல் நிலைய பொறுப்பதிகாரி அனுமதி மறுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
மன்னார் வங்காலை கடற்பகுதியில் வைத்து இன்று வியாழக்கிழமை (10.01.19) அதிகாலை சுமார் ஒரு கோடி 84 இலட்சம் ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சாப்பொதிகளுடன் நபர் ஒருவரை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
வங்காலை கடற்பகுதியில் பொதி செய்யப்பட்ட நிலையில் 184 கிலோ 200 கிராம் எடை கொண்ட கேரள கஞ்சாப்பொதிகளுடன் உயிலங்குளம் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சாப்பொதிகள் மற்றும் கைது செய்யப்பட்ட நபர் வங்காலை காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். வங்காலை காவற்துறையினர் மேலதிக விசாரனைகளை மேற்கொண்ட நிலையில் மன்னார் காவல் நிலையத்தில் குறித்த கஞ்சாப்பொதிகள் ஒப்படைக்கப்பட்டதோடு,கைது செய்யப்பட்ட நபரும் ஒப்படைக்கப்பட்டார்.
இந்த நிலையில் பெருந்தொகையாக குறித்த கேரள கஞ்சா தொடர்பில் இன்று காலை 10.30 மணியளவில் செய்தி சேகரிக்கச் சென்ற மன்னார் மாவட்ட பிராந்திய ஊடகவியலாளர்களுக்கு சிறிது நேரத்தின் பின் புகைப்படம்,வீடியோ எடுக்க அனுமதி வழங்குவதாக பொறுப்பதிகாரி கூறினார். எனினும் நீண்ட நேராமாகியும் அனுமதி கிடைக்காக நிலையில் ஊடகவியலாளர்கள் பொறுப்பதிகாரியிடம் வினவிய போது புகைப்பட எடுக்க அனுமதிக்க முடியாது.இதனால் தனது விசாரணைக்கு பாதீப்புக்கள் ஏற்படும் என ஊடகவியலாளர்களை அச்சுரூத்தும் வகையில் தெரிவித்தார்.
மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக கேரள கஞ்சா மீட்கப்பட்டு வருகின்ற போதும் அதிகாரிகளினால் முடி மறைக்கப்படுகின்றது. எனினும் எனைய மாவட்டங்களில் கைப்பற்றப்படுகின்ற கஞ்சா உடனுக்குடன் ஊடகங்களினூடாக வெளிக்கொண்டு வரப்படுகின்றது. குறித்த பொறுப்பதிகாரியின் செயற்பாடு தொடர்பில் ஊடகவியலாளர்கள் பொலிஸ் மா அதிபரின் கவனத்திற்கு கொண்டு செல்லவுள்ளதோடு, சட்டத்தரணிகளிடம் ஆலோசனைகளையும் பெற்றுள்ளனர்.