குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
யாழ்.மாநகர சபை எல்லைக்குள் ஆண்டின் முதல் வாரத்திலையே 40 பேர் டெங்கு நோயின் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளதாக யாழ்.மாநகர சபை சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
கடந்த 2018ஆம் ஆண்டு யாழ்.மாநகர சபை எல்லைக்குள் 569 பேர் டெங்கு நோயின் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளனர். அதில் நவம்பர் மாதம் 40 பேரும் , டிசம்பர் மாதம் 173 பேரும் பாதிக்கபட்டு உள்ளனர்.
அதேவேளை கடந்த 2017ஆம் ஆண்டு 905 பேர் டெங்கு நோய் தாக்கத்திற்கு உள்ளாகி இருந்தனர். அந்த வருடத்துடன் ஒப்பிடும் போது கடந்த வருடம் நோய் தாக்கத்திற்கு உள்ளானோர் குறைவடைந்து இருந்தனர். இந்நிலையில் வருடத்தின் முதல் வாரம் 40 பேர் டெங்கு நோய் தாக்கத்திற்கு உள்ளாகி உள்ளனர்..
டெங்கு நோயை கட்டுப்படுத்தும் நோக்குடன் டெங்கு நுளம்பை கட்டுபடுத்தும் செயற்பாடுகள் , விழிப்புணர்வு நடவடிக்கைகள் என்பவற்றை தீவிரமாக தாம் முன்னேடுத்து உள்ளதாக யாழ்.மாநகர சபை சுகாதார பிரிவினர் தெரிவித்தனர்.