நாட்டின் எல்லைகள் மிகுந்த பாதுகாப்பாக உள்ளதாகவும், இதில் அச்சமடைவதற்கு எந்த தேவையும் இல்லை என இந்திய ராணுவ தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார். டெல்லியில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த போதே ராணுவ தளபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நாட்டின் வடக்கு மற்றும் மேற்கு எல்லை நெடுகிலும் தாங்கள் அமைதியை பராமரித்து வருவதாகவும் நாட்டின் எல்லைகள் மிகுந்த பாதுகாப்பாக உள்ளன எனவும் இதில் அச்சமடைவதற்கு எந்த தேவையும் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் ஓரினச்சேர்க்கை மற்றும் தகாத உறவு குற்றம் அல்ல என உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ள போதிலும் ராணுவத்தை பொறுத்தவரை இது ஏற்கத்தக்கது அல்ல எனத் தெரிவித்த அவர் ஓரினச்சேர்க்கை மற்றும் தகாத உறவை ராணுவத்தில் அனுமதிக்க மாட்டோம் எனவும் தெரிவித்துள்ளார்.
ராணுவம் பழமைவாதமானது, ஒரு குடும்பம் போன்றது. எனவே இதில் மேற்படி செயல்கள் நுழைவதை அனுமதிக்க முடியாது எனவும் பிபின் ராவத் தெரிவித்துள்ளார். ;.