ராமேஸ்வரத்தையும் தமிழகத்தின் ஏனைய பகுதிகளையும் இணைக்கும் இந்தியாவின் முதல் செங்குத்தான தூக்குப் பாலத்தைக் கட்ட இந்திய புகையிரத திணைக்களம் முடிவு செய்துள்ளது.
இரண்டு கிலோ மீற்றர் தொலைவில் அமையவுள்ள இந்தப் பாலத்துக்கு 250 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக புகையிரத அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த புதிய பாலத்தில் கப்பல்கள் செல்வதற்காக 63 மீற்றர் நீளத்துக்குத் தூக்கு பாலம் அமைக்கப்படும் எனவும் இந்தப் பாலம் 18.3 மீற்றர்ர் நீளம் கொண்ட 100 ஸ்பான்களையும், 63 மீற்றர் நீளம் கொண்ட நவிகேஷனல் ஸ்பானையும் கொண்டிருக்கும் எனவும் இது தற்போதைய பாலத்தை விட மூன்று மீற்றர் அதிக உயரம் கொண்டதாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த நான்காண்டுகளுக்குள் இந்தப் பாலம் கட்டி முடிக்கப்படும் எனவும் இதைத் தொடர்ந்து, ராமேஸ்வரத்திலிருந்து தனுஷ்கோடிக்கு புகையிரதம் இயக்கப்படும் எனவும இந்தப் பாலத்தினைக் கட்டுவதற்கு புகையிரத திணைக்களம் கடந்த 7ம் திகதி ஒப்புதல் அளித்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1964ஆம் ஆண்டு ஏற்பட்ட புயலினால் இரு இடங்களுக்குமான துண்டிக்கப்பட்ட புகையிரத இணைப்பினை தற்போது மீண்டும் இணைப்பதற்கான முயற்சி மேற்கொள்ளப்படவுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது