178
சென்னை விமான நிலையத்தில் 8 கோடி ரூபாய் பெறுமதியான கடத்தல் தங்கத்தை பறிமுதல் செய்துள்ள அதிகாரிகள் இரு பெண்களையும் கைது செய்துள்ளனர். இன்று காலை ஹொங்காங்கில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணிகளையும் அவர்களின் உடைமைகளையும் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்த வேளையில் தென்கொரியாவைச் சேர்ந்த இரண்டு பெண்களின் பயணப்பொதிகளில் இருந்து குறித்த தங்கம் மீட்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து கைது செய்யப்பட்ட இரு பெண்களிடமும் அவர்கள் சென்னையில் யாருக்காக தங்கத்தை கடத்தி வந்தார்கள் என்பது குறித்து விசாரணைகள் இடம்பெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Spread the love