190
பாபி சிம்ஹா, ரம்யா நம்பீசன், மதுபாலா, சதீஷ் முதலியோர் நடித்துள்ள ‘அக்னி தேவ்’ படத்தின் பெயரில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக படக் குழு அறிவித்துள்ளது. இந்தப் படத்தில் பாபி சிம்ஹாவுக்கு நாயகியாக ரம்யா நம்பீசன் நடித்துள்ளார். அத்துடன் முக்கிய கதாபாத்திரத்தில் பிரபல நடிகை மதுபாலா மற்றும் சதீஷ் ஆகியோர் நடித்துள்ளனர்.
‘சென்னையில் ஒரு நாள் 2’ படத்தை இயக்கியஜான் பால்ராஜ் மற்றும் அறிமுக இயக்குனர் சாம் சூர்யா ஆகிய இருவரும் இணைந்து இந்தப் படத்தை இயக்கி இருக்கின்றனர். எழுத்தாளர் ராஜேஸ்குமாரின் நாவலான அக்னி தேவ் கதையே இந்தப் படத்தின் கதையாகும். ஜேக்ஸ் பெஜாய் இசையமைத்துள்ளார். இப்படத்தின் இறுதிகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இப்படத்தின் பெயரை மாற்றியுள்ளனர்.
‘அக்னி தேவ்’ என்னும் பெயரை ‘அக்னி vs தேவி’ என மாற்றியுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இதன் பெயர் மாற்றிய சுவரொட்டிகளை(போஸ்டர்) தற்போது படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
Spread the love