236
நடிகர் விக்ரமை வைத்து, சேது, பிதாமகன் முதலிய வெற்றிப் படங்களை இயக்கிய பாலா, இப்போது விக்ரம் மகனை வைத்து, வர்மா என்ற திரைப்படத்தை இயக்கி வருகின்றார். அத்துடன் நடிகர் விக்ரமைப்போல அவரது மகனும் நடிகருமான துருவ் விக்ரம், தன்னுடைய உடலமைப்பை மாற்றி வருகிறார். நடிகர் விக்ரம் தன்னுடைய உடலை எப்போதும் கட்டுக்கோப்பாக வைத்திருப்பவர்.
துருவ் தனது சமூக வலைத்தளத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருக்கிறார். இதைப்பார்த்த ரசிகர்கள் விக்ரமின் உடலுக்கு நிகராக அவரது உடலும் உள்ளது என்று கூறி வருகிறார்கள்.
தற்போது விக்கிரம் கடாரம் கொண்டான் என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இப் படத்திலும் தனது கட்டுக்கோப்பான உடலமைப்பின் மூலம் விக்ரம் கவனத்தை ஈர்த்துள்ளார். இதைப்போலவே தற்போது இவரது மகன் துருவ் விக்ரம் உடலை மேம்படுத்தி வருகிறார்.
துருவ் தனது சமூக வலைத்தளத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருக்கிறார். இதைப்பார்த்த ரசிகர்கள் விக்ரமின் உடலுக்கு நிகராக அவரது உடலும் உள்ளது என்று கூறி வருகிறார்கள்.
துருவ் விக்ரம், தற்போது வர்மா என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். பாலா இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படம் பெப்ரவரி மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Spread the love