166
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மன்னாரில் இன்றைய தினம் தைப்பொங்கல் கொண்டாட்டம் களைகட்டியதோடு,மக்கள் சமய வழிபாடுகளில் ஈடுபட்டனர்.உழைக்கும் மக்கள் இயற்கைக்கும்,ஏனைய உயிர்களுக்கும் நன்றி சொல்லும் ஒரு நாளாக இத்திருநாளை கொண்டாடுகின்றனர்.
இந்த நிலையில் மன்னார் மாவட்டத்தில் உள்ள இந்து ஆலயங்கள் மற்றும் கத்தோலிக்க தேவாலயங்களில் தைப்பொங்கல் நிகழ்வு இடம் பெற்றதோடு, விசேட வழிபாடுகளும் இடம் பெற்றது.
மேலும் மன்னார் மாவட்டத்தில் உள்ள வர்த்தகர்களும் தமது வர்த்தக நிலையங்களுக்கு முன்னால் பொங்கல் பொங்கி கொண்டாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Spread the love