உலகம் பிரதான செய்திகள்

சீனாவில் கனடாவினைச் சேர்ந்த ஒருவருக்கு மரண தண்டனை


சீனாவில் கனடாவினைச் சேர்ந்த ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ரொபர்ட்   ஷெல்பெர்க் (Robert Schellenberg ) என்ற அந்த நபருக்கு கடந்த நவம்பர் மாதம் 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.

எனினும் இந்த தீர்ப்பு போதாது என எதிர்ப்புத் தெரிவித்த உயர்நீதிமன்றம் நேற்று திங்கட்கிழமை மரண தண்டனையை விதித்துள்ளது.  கடந்த 2014ஆம் ஆண்டில் 36 வயதான ரொபர்ட் சீனாவில் இருந்து அவுஸ்திரேலியாவுக்கு 227 கிலோ நிறையுடைய போதைபொருளை கடத்த முயன்றதாக கைது செய்யப்பட்டிருந்தார்.

தற்போதைய மரணம் தண்டனை தீர்ப்பு சீனா மற்றும் கனடா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையேயான ராஜிய உறவை பாதிக்கக்கூடும் எனக் கருதப்படுகின்றது. இதேவேளை மரண தண்டனை விதித்த சீன நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது கண்டனங்களை தெரிவித்துள்ளார்.

ஓர் அரசாக இந்த தீர்ப்பு மற்றும் சூழல் தங்களுக்கு மிகவும் கவலை அளிப்பதாக உள்ளது எனவும் சீனா தங்கள் நாட்டை சேர்ந்தவருக்கு மரண தணடனை விதித்துள்ள நிலையில், இது தங்கள் தோழமை நாடுகளுக்கும் கவலை அளிப்பதாக அமைகிறது எனவும் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

இந்த தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்ய ரொபர்ட்க்கு 10 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் வேண்டுகோளுக்கு இணங்க சீன பெருநிறுவனமான ஹவாவேயின் ஒரு உயஅதிகாரியை கனடா கைது செய்ததை அடுத்து, ரொபர்ட் மீதான வழக்கு மீண்டும் விசாரிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.