Home உலகம் வெனிசுலாவில் சபாநாயகர் கைது செய்யப்பட்டமைக்கு கண்டனம்…

வெனிசுலாவில் சபாநாயகர் கைது செய்யப்பட்டமைக்கு கண்டனம்…

by admin

வெனிசுலாவில் பாராளுமன்ற சபாநாயகர் யுவான் கெய்டோ கைது செய்யப்பட்டமைக்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. வெனிசுலா பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியினர் ஆதிக்கம் செலுத்தி வருகின்ற நிலையில் அவர்கள் நிக்கோலஸ் மதுரோ இரண்டாவது முறையாக ஜனாதிபதியாவதற்கு கடும் ஆட்சேபனை தெரிவித்திருந்த போதும் அவர் கடந்த 10ம் திகதி உசசநீதிமன்றம. முன்னிலையில் இரண்டாவது முறையாக ஜனாதிபதியாக பதவி ஏற்றுக்கொண்டார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் எதிர்க்கட்சிகள் மதுரோ பதவி விலக வேண்டும் எனவும், புதிய தேர்தல் நடத்தப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்ற நிலையில் சபாநாயகரான யுவான் கெய்டோ, தான் ஜனாதிபதியாவதற்கு தயாராகி வருவதாக அறிவித்தார்.

இந்த நிலையில், தலைநகர் நடைபெறும் பேரணியில் பங்கேற்பதற்காக யுவான் நேற்று முன்தினம் சென்றுகொண்டிருந்த போது அப்போது பாதுகாப்புபடை வீரர்கள் அவரை தடுத்து நிறுத்தி கைது செய்து சில மணி நேரங்களின் பின்னர் விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More