152
யாழ்.கோண்டாவில் பகுதியில் உள்ள வீடொன்றினுள் புகுந்த கும்பல் ஒன்று வீட்டின் யன்னல் கண்ணாடிகள் அடித்து உடைத்ததுடன் , வீட்டின் முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டியையும் அடித்து நொறுக்கி விட்டு தப்பி சென்று உள்ளது. குறித்த சம்பவம் நேற்று திங்கட்கிழமை இரவு 09 மணியளவில் இடம்பெற்று உள்ளது.
நான்கு மோட்டார் சைக்கிளில் வந்த எட்டு பேர் கொண்ட கும்பலே தாக்குதலை மேற்கொண்டதாக வீட்டில் இருந்தோர் தெரிவித்தனர். குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் கோப்பாய் காவல்துறையினருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Spread the love