இலங்கையில் அண்மையில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடிக்கு பின்னர் உருவாகியுள்ள நிலைமை குறித்து அமெரிக்காவும் இலங்கையும் முக்கிய பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளன. அமெரிக்காவிற்கு பயணம் மேற்கொண்டுள்ள நிதியமைச்சர் மங்களசமரவீர தலைமையிலான குழுவினர் அமெரிக்காவின் தலைமை பிரதி உதவி இராஜாங்க செயலாளர் அலைஸ் வெல்சையும் மில்லிலேனியம் சலஞ்ச் ஒத்துழைப்பின் பிரதம அதிகாரியையும் சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளனர்.
அலைஸ் வெல்ஸ் மற்றும் இலங்கைகான அமெரிக்க தூதுவர் ஆகியோருடன் ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டதாக பொருளாதார சீர்திருத்த விவகாரங்களிற்கான அமைச்சர் ஹர்சா டி சில்வா தனது டுவிட்டர் செய்தியில் தெரிவித்துள்ளார். குறிப்பாக பிராந்திய விவகாரங்கள், பாதுகாப்பு மற்றும் பொருளாதார அபிவிருத்தி ஒத்துழைப்பு குறித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார்.