அனைத்து கணணிகளையும் கண்காணிக்க 10 விசாரணை அமைப்புகளுக்கு அதிகாரம் வழங்கிய மத்திய அரசின் அறிவிப்புக்கு எதிராக உச்சநீதிமன்றில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் 6 வாரங்களுக்குள் பதில் அளிக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது
கடந்த மாதம் 20ம் திகதி மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பில் அனைத்து கணணிகளையும் இடைமறிக்கவும், கண்காணிக்கவும், ஆய்வு செய்யவும் சி.பி.ஐ., நுண்ணறிவு பிரிவு, போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு, அமுலாக்கத்துறை, வருவாய் புலனாய்வு பிரிவு உள்பட 10 அமைப்புகளுக்கு அதிகாரம் வழங்கப்படுவதாக கூறப்பட்டு இருந்தது.
இந்தநிலையில் மத்திய அரசின் அறிவிப்பை எதிர்த்து உச்சநீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், இந்த அறிவிப்பு சட்டவிரோதமானது, அரசியல்சாசனத்துக்கு முரணானது, சட்டத்தின் வரம்புக்கு அப்பாற்பட்டது.
இந்த அறிவிப்பின்படி தகவல் தொழில்நுட்ப சட்டத்தின்கீழ் யார் மீதும் விசாரணை நடத்தவும், குற்ற நடவடிக்கை எடுக்கவும் அந்த 10 அமைப்புகளுக்கும் தடைவிதிக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.
இந்த மனுவினை விசாரித்த உச்சநீதிமன்றம் 6 வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது