148
பசிபிக் பெருங்கடலில் உள்ள வானுட்டு தீவில் 6.6 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்காவின் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் 47 கிலோமீற்றர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் இந்த நிலநடுக்கத்தால் சுனாமி அச்சுறுத்தல் இல்லை எனவும் பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த உடனடி தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை
வானுட்டு தீவுகள் பசிபிக் பெருங்கடலில் ‘ரிங் ஆப் பயர்’ என்ற பகுதியில் அமைந்துள்ளது. இந்த பகுதிகளில் பெரிய பூகம்பங்களும், எரிமலை வெடிப்புகளும் அடிக்கடி நிகழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது
Spread the love