166
பட்டதாரிகளுக்கான 2 ஆம் கட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் நியமனத்தை துரித கதியில் வழங்குமாறு வட மாகாண பட்டதாரிகள் சமூகம் கோரிக்கை விடுத்துள்ளது. கடந்த காலத்தில் அரசியல் குழறுபடிகள் சிக்கல்கள் இடம்பெற்றதாக குறித்த நியமனத்தை வழங்காமல் இழுத்தடித்து வருவதை ஏற்றுக்கொள்ள முடியாது உள்ளதாகவும் மிகவிரைவில் இடம்பெறவுள்ள தேர்தலுக்கு முன்னர் நியமனத்தை வழங்குமாறு கேட்டுள்ளது.
கடந்த வருடம் 4200 க்கும் மேற்பட்ட பட்டதாரிகள் முதலாம் கட்டமாக நல்லாட்சி அரசினால் நியமனம் வழங்கப்பட்டிருந்தனர். பின்னர் 2 ஆம் கட்டம் டிசம்பர் மாதம் வழங்கப்பட்டு பின்னர் ஏனையவர்களுக்கு கட்டம் கட்டமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. எனினும் இதுவரை வழங்கப்படாமல் தற்போது வரை இழுத்தடிக்கப்பட்டு வருகிறது.
எனவே இவ்விடயம் குறித்து ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அபிவிருத்தி உத்தியோகத்தர் பதவி நியமனம் குறித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது.
மேலும் வேலையற்ற பட்டதாரிகளுக்கு அபிவிருத்தி உத்தியோகத்தர் நியமனம் வழங்க கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நல்லாட்சி அரசாங்கம் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகார அமைச்சு ஊடாக விண்ணப்பங்களை கோரியதுடன் மாவட்ட அடிப்படையில் மாத்தறை- 193 களுத்துறை- 281 ஹம்பாந்தோட்டை- 130 கேகாலை- 163 யாழ்ப்பாணம் 334 மட்டக்களப்பு- 380 கொழும்பு- 171 இரத்தினபுரி- 236 மொனராகலை- 68 மாத்தளை- 79 கம்பஹா- 331 கண்டி- 224 காலி- 237 வவுனியா- 80 குருணாகல- 311 நுவரெலியா- 52 பதுளை- 139 அனுராதபுரம்- 107 புத்தளம்- 77 திருகோணமலை- 64 கிளிநொச்சி- 71 முல்லைத்தீவு- 73 மன்னார்- 126 அம்பாறை- 101 பொலனறுவை- 23 பேர் நியமனம் பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
எனினும் அதில் பல குழறுபடிகள் இருப்பதாக பல தரப்பிலிருந்தும் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டிருந்தது.இதில் பல்கலைகழகத்திலிருந்து நீண்டகாலத்தின் முன் வெளியேறியவர்களை விட அண்மையில் வெளியேறியவர்கள் அதிகளவில் இணைக்கப்பட்டிருந்தனர்.அதை விட ஏற்கனவே அரச சேவையில் இருக்கும் சிலரும் இந்த பட்டியலில் இருப்பது அடையாளம் காணப்பட்டிருந்தது. யாழ்ப்பாணம் மட்டக்களப்பு அம்பாறை பகுதி நியமனங்களில் இது அவதானிக்கப்பட்டுள்ளது.அத்துடன் அதிக வயதுள்ள பட்டதாரிகள் இன்னும் வேலைவாய்ப்பின்றி இருப்பது இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.
எனவே பிரதமரின் நேரடி கண்காணிப்பில் உள்ள தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சினால் வழங்கப்படும் அபிவிருத்தி உத்தியோகத்தர் நியமனம் 2 ஆம் கட்டம் நியமிக்கப்படுமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது என தெரிவிக்க விரும்புகின்றோம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது
பாறுக் ஷிஹான்
Spread the love