198
ஜனாதிபதி தேர்தலுக்கு தானும் தயார் என முன்னாள் சபாநாயகரும் பாராளுமன்ற உறுப்பினருமான சமல் ராஜபக்ஸ அறிவித்துள்ளார். ஜனாதிபதி பதவிக்கு தானும் பொருத்தமானவர் எனவும், ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு தயாராகவே இருக்கிறேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மக்கள் தயார் என்றால், ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு தயாராகவே இருப்பதாக முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஸ அண்மையில் தெரிவித்திருந்த நிலையில் தற்போது சமல் ராஜபக்ஸ இவ்வாறு தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Spread the love