இந்திய கால்பந்து அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் கன்ஸ்டன்டைன்( Stephen Constantine) பதவிவிலகியுள்ளார். ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகின்ற 17-வது ஆசிய கிண்ண கால்பந்து போட்டியில் தனது கடைசி லீக் போட்டியில் பக்ரைனிடம் இந்திய அணி 0-1 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்திருந்தது.
இதனால் இந்திய அணி அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து வெளியேறியது. இதனையடுத்து இந்திய கால்பந்து அணியின் தலைமை பயிற்சியாளரான இங்கிலாந்தைச் சேர்ந்த 56 வயது ஸ்டீபன் கன்ஸ்டன்டைன் பதவிவிலகுவதாக அறிவித்துள்ளர்h.
தனது சுழற்சி முடிந்து விட்டது எனவும் அணியில் இருந்து விடைபெறுவதற்கு இது சரியான தருணம் என நினைப்பதாகவும் தெரிவித்துள்ள அவர் அடுத்த சுற்றுக்கு தகுதி பெறாமல் வெளியேறியது வருத்தம் அளிக்கிறது எனவும் இனிமேல் தனது குடும்பத்தினருடன் அதிகநேரத்தை செலவிட விரும்புகிறேன் எனவும் தெரிவித்துள்ளார்
2-வது முறையாக 2015-ம் ஆண்டில் இந்திய அணியின் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்ற ஸ்டீவன் கன்ஸ்டன்டைனின் பதவி காலம் எதிர்வரும்31ம் திகதியுடன் முடிகின்றது. கன்ஸ்டன்டைன் பயிற்சியில் இந்திய அணி தரவரிசையில் 96-வது இடத்துக்கு முன்னேறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.