சென்னை மெரினா சாலையில் எம்ஜிஆர் நூற்றாண்டு நினைவு வளைவு, ஆடம்பரமான விழா எதுவும் இல்லாமல் இன்று திறக்கப்பட்டுள்ளது அரச சார்பில் 2.52 கோடி ரூபா செலவில் இதன் பாதி கட்டுமானப் பணிகள் முடிவடைந்த நிலையில், இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டிருந்தது.
உச்ச நீதிமன்ற உத்தரவின்படி மெரினா சாலையில் சிவாஜி கணேசன் சிலை அகற்றப்பட்ட உத்தரவை மேற்கோள் காட்டி, எம்ஜிஆர் வளைவை திறக்கக்கூடாது குறித்த வழக்கில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், முதலில் வளைவை திறக்க தடை விதித்து பின்னர், ஆடம்பர விழாவாக நடத்தாமல் ஐந்து நிமிட நிகழ்ச்சியாக மெரினாவில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு வளைவை திறக்கலாம் என அனுமதி அளித்தனர்.
இந்நிலையில், எம்ஜிஆர் நூற்றாண்டு வளைவு கட்டுமான பணிகள் முடிவடைந்ததையடுத்து, ஆடம்பர விழா எதுவும் இல்லாமல் நூற்றாண்டு வளைவு இன்று திறக்கப்பட்டுள்ளது