ஐக்கிய நாடு சபையின் பணியாளர்கள், ஒப்பந்தக்காரர்களில் மூன்றிலொரு பேர் கடந்த இரண்டு வருடங்களில் பாலியல் துன்புறுத்தலை அனுபவித்துள்ளனர் என ஐக்கிய நாடுகள் சபயினால் வெளியடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் வெளியிடப்பட்ட இந்த அறிக்கையின்படி, பாலியல் கதைகள் அல்லது புண்படுத்தும் நகைச்சுவைக்குள்ளாகியுள்ளதாக 21.7 சதவீதமானோர் தெரிவித்துள்ளனர். அத்துடன் தங்களது தோற்றம், உடல், பாலியல் நடவடிக்கைகள் தொடர்பாக புண்படுத்தும் கருத்துகளை சந்தித்ததாக 14.2 சதவீதமானோர் தெரிவித்துள்ளனர்.
ஐக்கிய நாடுகள் அமைப்பு அதன் நிறுவனங்களிடையே நிறுவனம் ஒன்றினால் கடந்தாண்டு நடாத்தப்பட்ட இணைய ஆய்வில் இந்த விடயம் தெரிய வந்துள்ளது. இந்நிலையில், ஆய்வுக்கான பதிலளிப்பு குறைவு என பணியாளர்களுக்கான கடிதத்தில் தெரிவித்துள்ள ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் அன்ரனியோ குட்டரெஸ், பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக முழுமையாக திறந்த கலந்துரையாடலை தாங்கள் நடத்துவதற்கு நீண்ட காலமுள்ளதெனக் தெரிவித்துள்ளார். அத்துடன் நம்பிக்கையின்மை, நடவடிக்கை எடுக்கப்படாதென்ற அச்சம், பொறுப்புக்கூறல் குறைவு போனற் காணப்படுவதாகக் தெரிவித்துள்ளார்.
பாலியல் துன்புறுத்தலை அனுபவித்தோரில் அரைவாசிக்கும் அதிகமானோர் அது அலுவலகச் சூழலிலேயே இடம்பெற்றதாகத் தெரிவித்துள்ள அதேவேளை, பாலியல் துன்புறுத்தல்களை மேற்கொள்ளும் மூன்று பேரில் இருவர் ஆண்கள் எனத் தெரிவித்துள்ளதுடன், பாலியல் துன்புறுத்தல்களுக்கெதிராக மூன்றிலொருவரே நடவடிக்கை எடுத்ததாகவும் தெரிவித்துள்ளனர்.