யாழ்.பல்கலைக்கழகத்தின் பொங்கு தமிழ் பிரகடணத்தின் 18 ஆம் ஆண்டு நிறைவு நாள் இன்று வியாழக்கிழமை நினைவு கூரப்பட்டது. யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள், ஆசிரியர்கள், விரிவுரையாளர்கள், ஊழியர்கள் ஆகியோர் இணைந்து பல்கலைக்கழக கலைப்பீட வளாகத்திற்குள் உள்ள பொங்குதமிழ் நினைவு தூபி முன் கூடி பொங்குதமிழ் பிரகடண நிறைவு நாளை நினைவு கூர்ந்திருந்தனர்.
இராணுவத்தினரின் அடக்குமுறைகள் முழுமையாக யாழ்.பல்கலைக்கழகத்தினை முற்றுகையிட்டிருந்த நிலையிலும் யாழ்.பல்கலைக்கழக சமூகத்தினால் கடந்த 2001 ஆம் ஆண்டு பொங்கு தமிழ் என்னும் தொணிப் பொருளில் மாபெரும் எழுச்சி நிகழ்வு நடத்தப்பட்டது.
இவ் எழுச்சி நிகழ்வில் வைத்து தமிழ் மக்களின் அபிலாசைகளான சுயநிர்ணைய உரிமை, மரபுவழித்தாயகம், தமிழ் தேசியம் என்பவை அங்கிகரிக்கப்பட வேண்டும் என்பவை பொங்குதமிழ் பிரகடணமாக பிரகடணப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.