181
சுந்தர்.சி இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகி வரும் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ படக்குழுவினர் தமது திரைப்படத்தின் பாடல் ஒன்றை வெளியிடவுள்ளதாக இன்று அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
`செக்கச் சிவந்த வானம்‘ படத்தைத் தொடர்ந்து நடிகர் சிம்பு நடித்துள்ள திரைப்படம் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’. சுந்தர்.சி இயக்கத்தில் மேகா ஆகாஷ் நாயகியாக இத் திரைப்படத்தில் நடிக்கின்றார். உருவாகும் அத்துடன் மகத், ரோபோ சங்கர், ரம்யாகிருஷ்ணன் முதலியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
படத்தின் அனைத்துப் பணிகளும் முடிந்து எதிர்வரும் பெப்ரவரி முதலாம் திகதி வெளியாகவுள்ளது. இந்நிலையில், இப்படத்தின்பாடல் ஒன்றை நாளை வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். சிம்பு பாடியுள்ள “ரெட் கார்டு” எனப்படும் இப்பாடலுக்கு ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையமைத்திருகின்றமை விசேட அம்சமாக தெரிவிக்கப்படுகின்றது.
Spread the love