புதிய எதிர்க்கட்சி தலைவராக நியமிக்கப்பட்டுள்ள மகிந்த ராஜபக்ஸ இன்றையதினம் தனது கடமைகளை உத்தியோகப்பூர்வமாக பொறுப்பேற்றுள்ளார். கொழும்பில் அமைந்துள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற மத வழிபாடுகளை தொடர்ந்து சம்பிரதாயபூர்வமாக அவர் தனது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.
எதிர்க்கட்சி தலைவராக மகிந்த ராஜபக்ஸ நியமிக்கப்பட்ட போதிலும், முன்னாள் எதிர்க்கட்சி தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தை ஒப்படைக்காத நிலையில் புதிய எதிர்க்கட்சி தலைவர் கடமைகளை பொறுப்பேற்பதில் தாமதம் நிலவி வந்தது. இந்த நிலையில் இன்றையதினம் மகிந்த கடமைகளை பொறுப்பேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.