பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினர் விடுதலைப் புலிகளின் நினைவு நிகழ்வுகளை நடத்துவதற்கு தடை விதித்துள்ளமையினால் எதிர்வரும் காலங்களில் நினைவுதின நிகழ்வுகளை நடத்தமாட்டோம் என புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் க.இன்பராசா தெரிவித்துள்ளார். நேற்றையதினம் யாழ் ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கடந்த புதன்கிழமை கொழும்பில் உள்ள இரண்டாம் மாடிக்கு தங்களை அழைத்து பிற்பகல் 2.30 மணிவரை விசாரணை நடத்திய பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினர் கடந்த யூலை 5 கரும்புலி நாள் நெல்லியடியில் நினைவுகூரப்பபட்டமை தொடர்பில் தொடர்பில் விசாரணை நடத்தினார்கள்.
குறித்த நினைவு நிகழ்வை நடத்துவதற்கு யார் அனுமதி வழங்கியது எனக் கேட்டதுடன் இனிமேல் இவ்வாறு விடுதலைப்புலிகளின் நினைவுதின நிகழ்வுகளை நடத்தக் கூடாது என தெரிவித்துள்ளதுடன அதற்கான உறுதிமொழியை பெற்றதுடன் தங்களிடமிருந்து பத்திரமொன்றில் கையெழும் பெற்றுக் கொண்டனர் எனத் தெரிவித்துள்ளார்.
இதன் அடிப்படையில் இனிமேல் தாங்கள் விடுதலைப் புலிகளின் நினைவுதின நிகழ்வுகளை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதனை கவலையுடன் தெரிவித்துக் கொள்கிறோமென க.இன்பராசா தெரிவித்துள்ளார்.