186
இந்திய விளையாட்டு ஆணையக இயக்குனர் உள்ளிட்ட 6 பேர் நேற்றையதினம் சி.பி.ஐயினால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்திய விளையாட்டு ஆணையகத்தில் நிலுவையில் உள்ள 19 லட்சம் ரூபா பெறுமதியான தொகை ஒன்றினை வழங்க 3 சதவீதம் லஞ்சம் விளையாட்டு ஆணையகம் கோரியதாக சி.பி.ஐ. யிடம் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதைத்தொடர்ந்து, நேற்று மாலை இந்திய விளையாட்டு ஆணையக தலைமை அலுவலகத்துக்கு சென்ற சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை மேற்கொண்டதுடன் விசாரணையும் மேற்கொண்டுள்ளதன் பின்னர். இந்திய விளையாட்டு ஆணையகத்தின் இயக்குனர் எஸ்.கே.சர்மா, உள்ளிட்ட 7 பேரை கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
Spread the love