210
நடிகர் விஜய் அன்ரனி , தமிழரசன் என்ற புதிய திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இந்தத் திரைப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இமையமைக்க இருப்பதாக படக் குழு அறிவித்துள்ளது. படத்தை பாபு யோகேஸ்வரன் இயக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொலைகாரன், அக்னிச் சிறகுகள் படங்களைத் தொடர்ந்து விஜய் அன்ரனி அடுத்ததாக தமிழரசன் என்ற படத்தில் ஒப்பந்தமாகியிருக்கிறார். நான், சலீம், பிச்சைக்காரன், சைத்தான் என வெற்றித் திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் வரவேற்றை பெற்றுள்ளார் விஜய் அன்ரனி.
பாபு யோகேஸ்வரன் இயக்கும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு பூசை இன்று இடம்பெற்றுள்ளது. இதேவேளை, முதன்முறையாக விஜய் அன்ரனியின் திரைப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கின்றார். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்ள, புவன் ஸ்ரீனிவாசன் படத்தொகுப்பு பணிகளை ஆற்றுகின்றார்.
எஸ்.என்.எஸ். மூவிஸ் சார்பில் எஸ்.கௌசல்யா ராணி தயாரிக்கும் இந்த திரைப்படத்தின் முதல் புகைப்படம் மற்றும் சுவரொட்டியை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. வழமையான தனது படங்களுக்கு தானே இசையமைக்கும் விஜய் அன்ரனி, இம்முறை இசைஞானி இளையராஜாவை தமிழரசனுக்கு இசையமைக்க அழைப்பிருப்பது சிறப்பம்சமாகும்.
Spread the love