204
மத்திய சுகாதார அமைச்சினால் ஒரு தொகுதி அதிநவீன நோயாளர் காவுவண்டிகள் நேற்றைய தினம் (18-01-2019) நாட்டிலுள்ள வைத்தியசாலைகளுக்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
மத்திய சுகாதார அமைச்சினால் ஒரு தொகுதி அதிநவீன நோயாளர் காவுவண்டிகள் நேற்றைய தினம் (18-01-2019) நாட்டிலுள்ள வைத்தியசாலைகளுக்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன நேற்று (18) பிற்பகல் கொழும்பு மாநகரசபை மைதானத்தில் இடம் பெற்ற வைபவரீதியிலான கையளிப்பு நிகழ்வின்போது 132 நோயாளர் காவுவண்டிகளையும் அந்தந்த வைத்தியசாலைகளுக்குக் கையளித்தார்.
மொத்தம் 2500 மில்லியன் பெறுமதியான பிரித்தானியாவில் தயாரிக்கப்பட்ட போட் ரக அதிநவீன நோயாளர் காவுவண்டிகளில் 103 வண்டிகள் மாகாண சுகாதார அமைச்சுகளின் கீழ் இயங்கும் வைத்தியசாலைகளுக்கும், 27 மத்திய சுகாதார அமைச்சின் கீழ் இயங்கும் வைத்தியசாலைகளுக்கும் 02 ஆயர்வேத வைத்தியசாலைகளுக்கும் வழங்கி வைக்கப்பட்டுள்ளன எனச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
வடமாகாணத்தில் சில வைத்தியசாலைகளில் நோயாளர் காவுவண்டிகளே இல்லாத நிலையும், மேலும் சிலவற்றில் மிகப் பழைய நோயாளர் காவுவண்டிகள் நீண்டகாலமாக சேவையில் உள்ள அவலமும் நிகழ்ந்துவருகிறது.
இந்நிலையில் வடமாகாணத்தில் தெரிவுசெய்யப்பட்ட சில வைத்தியசாலைகளுக்கும் இந்த அதிநவீன நோயாளர் காவுவண்டிகள் வழங்கப்பட்டுள்ளதுடன் கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் கீழ் வரும் வைத்தியசாலைகளுக்கென 03 வண்டிகள் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.
அதேவேளை கிளிநொச்சியில் வேரவில் போன்ற போக்குவரத்துச் சிரமங்கள் மிகுந்த இடங்களில் உள்ள வைத்தியசாலைகளுக்கு அந்தப் பகுதிகளுக்கு ஏற்றவகையிலான நோயாளர்காவு வண்டிகள் வழங்கப்படவேண்டும் என்ற கோரிக்கையானது முன்னாள் வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கத்தினால் அண்மையில் கிளிநொச்சிக்கு வருகை தந்த மத்திய சுகாதார அமைச்சருக்கு முன்வைக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது
Spread the love