இந்திய அரசாங்கத்தின் 150 மில்லியன் ரூபா நிதியுதவியுடன் மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சின் ஊடாக ‘பேண்தகு யுகம் முன்னேற்றத்தின் பலம் – எங்கள் நிலத்தில் எங்கள் வீடு’ என்னும் தொனிப் பொருளோடு டயகம மேற்கு தோட்டத்தில் தலா ஏழு பேர்ச் காணியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள 150 தனி வீடுகளைக் கொண்ட ‘ஆபிரஹாம் சிங்ஹோ’ எனும் புதிய கிராமம் நேற்று பயனாளிகளுக்கு கையளிக்கப்ப்டது.
இந் நிகழ்வில் மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம், காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சர் கயந்த கருணாதிலக், இலங்கைக்கான இந்திய பிரதி உயர் ஸ்தானிகர் சில்பேக் அம்புலே, நுவரெலியா மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் எம். திலகராஜா, அமைச்சின் செயலாளர் பொன்னையா சுரேஸ், நுவரெலியா மாவட்ட செயலாளர் எம்.பீ.ஆர் புஸ்பகுமார, மத்திய மாகாண சபை முன்னாள் உறுப்பினர்களான எம். உதயகுமார், சிங். பொன்னையா, எம். ராம், சரஸ்வதி சிவகுரு, ‘ட்ரஸ்ட்’ நிறுவனத் தலைவர் வீ. புத்திரசிகாமணி உட்பட நகர சபை, பிரதேச சபை உறுப்பினர்கள், தோட்ட முகாமையாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.