கடந்த ஆண்டு நவம்பர் 22ம் திகதி அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் கைதிகள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணை செய்ய நியமிக்கப்பட்ட மூவரடங்கிய குழுவின் விசாரணை அறிக்கை இன்று நீதி மற்றும் சிறைச்சாலைகள் அமைச்சர் தலதா அத்துகோரலவிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கைதிகளின் உரிமையை பாதுகாக்கும் அமைப்பினால் இது சம்பந்தமான சிசிரிவி காட்சிகள் ஊடகவியலாளர் சந்திப்பின் போது வெளியிடப்பட்டிருந்ததனையடுத்து இந்த சம்பவம் தொடர்பில் உண்மையை கண்டறிவதற்காக நீதி மற்றும் சிறைச்சாலைகள் அமைச்சர் தலதா அத்துகோரலவினால் இரு குழுக்கள் நியமிக்கப்பட்டிருந்தது.
அதில் ஒரு குழுவின் அறிக்கை இன்று அமைச்சரிடம் ஒப்படைக்கப்பட உள்ள அNதுவேளை இரண்டாவது குழுவின் அறிக்கை எதிர்வரும் 25 ஆம் திகதி அமைச்சரிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.