கொடைக்கானல் மலையில் ஏற்பட்டுள்ள பயங்கர தீ விபத்தால் அரியவகை மரங்கள் எரிந்து அழிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து தீ பரவி வருவதால் வனப்பகுதியில் உள்ள விலங்குகள் ஊருக்குள் பு கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் கொடைக்கானலில் ஆண்டு முழுவதும் இதமான காலந்லைய நிலவி வருவதனால்; பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் அங்கு சென்றவண்ணமுள்ளனர்.
இந்தநிலையில் தற்போது அங்கு நிலவும் கடும் பனி காரணமாக புல் பூண்டுகள் மற்றும் அரியவகை மரங்கள் கருகி வருகின்ற நிலையில் நேற்று இரவு செண்பகனூர் அருகே வெள்ளப்பாறை என்ற இடத்தில் உள்ள வனப்பகுதியில் திடீரென தீ பிடித்துள்ளது. காற்று வேகமாக வீசியதால் நெருப்பு ஏனைய இடங்களுக்கும் பரவியதுடன் பல மணிநேரமாக நெருப்பு எரிந்து கொண்டே இருந்ததால் மலைப்பகுதியில் உள்ள அரியவகை மரங்கள் எரிந்து அழிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
கவல் அறிந்த வனத்துறை, தீயணைப்புத்துறையினர், பேத்துப்பாறை, வெள்ளப்பாறை மற்றும் மலை கிராம மக்களுடன் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.