139
சித்து +2 என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி ராஜா ரங்குஸ்கி, வண்டி உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து கவனத்தை ஈர்த்துள்ள நடிகை சாந்தினி, தற்போது ஒரு திரைப்படத்தில்ஆசிரியராக நடித்துள்ளார்.
அண்மையில் திருமணம் செய்து கொண்ட சாந்தினி, பிரித்விராஜனுக்கு ஜோடியாக நடித்த காதல் முன்னேற்ற கழகம் திரைப்படம் வெளியீட்டுக்கு தயாராகி வருகின்றது. மலர்க்கொடி முருகன் தயாரிக்க மாணிக் சத்யா இந்தத் திரைப்படத்தை இயக்குகிறார்.சிங்கம் புலி, கஞ்சா கருப்பு, சிவசேனாதிபதி ஆகியோரும் இத் திரைப்படத்தில் நடித்துள்ளனர்.
இந்த திரைப்படம் குறித்து இயக்குநர் மாணிக் சத்யா பேசும்போது, “இந்தப் படம் 1985களில் நடக்கும் கதை. பிரித்விராஜன் நடிகர் கார்த்திக்கின் தீவிர ரசிகர். அவரை போலவே முடியை வளர்த்துக் கொண்டு ரசிகர் மன்றம் அது, இது என்று வேலைக்கு போகாமல் அலைந்து கொண்டிருப்பவர். சாந்தினி ஆசிரியராக நடிக்கிறார் என்றும் கூறியுள்ளார்.
Spread the love