குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் வயல் விழா கொண்டாடப்பட்டது. யாழ்.காரைநகர் -பாலக்காடு இராஜேஸ்வரி அம்மன் ஆலய முன்றலில் இன்று காலை 10 .30 மணியளவில் இவ் விழா கொண்டாடப்பட்டது.
ஜனாதிபதியின் எண்ணக்கருவிற்கு அமைய ‘நஞ்சற்ற உணவுகளை உற்பத்தி செய்வோம்’ என்ற தொணிப்பொருளில் இவ் வயல் விழாவானது மேற்கொள்ளப்பட்டது.
இதன்படி இயற்கை பசளைகளை பயன்படுத்தி பயிரிடப்பட்ட மொட்டை கறுப்பான் நெல் பயிரிடப்பட்டதை இவ் விழாவின் போது முக்கியத்துவப்படுத்தியிருந்தனர்.
குறித்த விவசாயின் வயல் காணிகளை அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டதுடன் அதன் நன்மைகள், விவசாய முறைகள் தொடர்பாகவும் தெளிவுபடுத்தியிருந்தனர்.
இதேவேளை இவ் வயல் விழாவில் யாழ்.மாவட்ட விவசாய திணைக்கள பிரதிப் பணிப்பாளர் சிறிரங்கன் அஞ்சனாதேவி மற்றும் விவசாய திணைக்கள அதிகாரிகள், பொது மக்கள், விவசாயிகள், காரைநகர் இளம் விவசாயிகள் சங்கத்தினர் ஆகியோரும் பங்குபற்றியிருந்தனர்.