160
வடமராட்சி கிழக்கு அம்பன் பகுதியில் மீட்கப்பட்ட மோட்டார் குண்டுகள் இன்றையதினம் வெடிக்கவைத்து அழிக்கப்பட்டுள்ளன. குறித்த மோட்டார் குண்டுகள் கிழக்கு கொட்டோடை கடற்கரைப்பகுதியில் வெடிக்க வைத்து அழிக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம் தனியார் ஒருவருக்கு சொந்தமான காணியொன்றிலிருந்து குறித்த 81 மில்லி மீற்றர் மோட்டார் குண்டுகளும், 13.5 கிலோ கிராம் நிறைகொண்ட 3 அமுக்க குண்டுகளும் சிறப்பு அதிரடிப் படையினரால் மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Spread the love