அரச பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களின் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ போராட்டம் தமிழகம் முழுவதிலும் 300 இடங்களில் இன்று இரண்டாவது நாளாக நடைபெறுகின்றது.
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமுல்படுத்த வேண்டும், 21 மாத ஊதிய நிலுவையை வழங்க வேண்டும், இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போராட்டம் நேற்று முதல் நடைபெறுகின்றது.
முதல்நாள் போராட்டத்தில் 6 லட்சம் பேர் பங்கேற்றுள்ளதாகவும் நடுநிலைப் பாடசாலை ஆசிரியர்களும் வேலைநிறுத்தத்தில் அதிகளவு பங்கேற்றதால் மாணவர்கள் பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
மேலும் அரசு ஊழியர்கள் வேலைக்கு செல்லாததால் வருவாய்த்துறை, வணிக வரித்துறை, ஊரக வளர்ச்சி துறை, கலெக்டர் அலுவலகம் உள்ளிட்ட அலுவலகங்களில் பணிகள் பாதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது இந்த நிலையில் இன்று 2-வது நாளாகவும் போராட்டம் நீடிக்கிறது. தமிழகம் முழுவதும் 300 இடங்களில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
போராட்டத்தில் ஈடுபடும் அனைவரும் கைது செய்யப்படுவார்கள் எனவும் கைது செய்து சிறையில் அடைப்பது பற்றி தாம் கவலைப்படவில்லை எனவும் தங்களது கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டத்தை கைவிடமாட்டோம் என ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர் அன்பரசு தெரிவித்துள்ளார்.
1 comment
Anna University related
News missing