நைஜீரியாவில் வேகமாக பரவி வரும் புதிய லசா காய்ச்சலால் இதுவரை 16 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது உலகின் மிக மோசமான நோய்களில் ஒன்றான லசா காய்ச்சல் கடந்த ஆண்டு தொடக்கத்தில் திடீரென வேகமாக பரவி, 23 நாடுகளை தாக்கிய நிலையில் 171 பேர் உயிரிழந்திருந்தனர்.
இந்தநிலையில் தற்போது இந்த நோய் நைஜீரியாவில் மீண்டும் பரவி வருகின்ற நிலையில் அங்கு லசா காய்ச்சலுக்கு இதுவரை 16 பேர் பலியாகியுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தற்போது 26.7 சதவிகித இறப்பு விகிதம் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தேசிய மையக் கண்காணிப்பு அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த ஆண்டின் ஆரம்பத்திலிருந்து 172 நோயாளிகள் லசா காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பதாக சந்தேகிக்கப்பட்டதாகவும் பரிசோதனையின் முடிவில் 60 பேருக்கு உள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது எனவும் நைஜீரியாவின் 36 மாநிலங்களில் உள்ள ஏழு இடங்களிலும், அபுஜாவின் தலைநகரத்திலும் இதன் தாக்கம் கண்டறியப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது 1969 ஆம் ஆண்டில் கண்டறியப்பட்ட இந்த நோய்க்கு வைக்கப்பட்ட லசா எனும் பெயர் வடக்கு நைஜீரியாவின் லசா நகரத்திலிருந்து வந்ததாகும். இந்த வைரஸ் எலிகள் மூலமாகவும், இந்நோய் பாதிக்கப்பட்டவர்களின் தொற்றினாலும் பரவ அதிக வாய்ப்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது