பெருந்தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படைச் சம்பளத்தை 1,000 ரூபாயாக அதிகரிக்குமாறு விடுக்கப்படும் கோரிக்கையின் அழுத்தங்கள், நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற நிலையில் குறித்த விவகாரம் தொடர்பில் இன்றையதினம் பாராளுமன்றத்தில் முழுநாள் விவாதம் நடத்தப்படவுள்ளது ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க இதற்கான சபை ஒத்திவைப்புவேளை பிரேரணையை முன்வைக்கவுள்ளார்.
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பான கூட்டு ஒப்பந்தம் குறித்த பல பேச்சுவார்த்தைகள், முதலாளிமார் சம்மேளனத்துக்கும் தொழிற்சங்கப் பிரதிநிதிகளுக்கும் இடையில் இடம்பெற்ற போதிலும் அதில் எந்தவோர் இணக்கப்பாடும் எட்டப்படவில்லை.
இதனையடுத்து நாளொன்றுக்கான அடிப்படைச் சம்பளத்தை, 1,000 ரூபாயாக அதிகரிக்குமாறு, பல்வேறான சிவில் அமைப்புகள், அழுத்தம் கொடுக்கும் வகையிலான போராட்டங்கள், நாடாளவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையிலேயே, சபை ஒத்திவைப்பு வேளை விவாதம், இன்று இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது