164
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
யாழ்.மத்திய பேருந்து நிலையத்தை சூழவுள்ள தற்காலிக கடைகளை எதிர்வரும் 31ஆம் திகதிக்கு முன்னர் அகற்றுமாறு யாழ்.மாநகர முதல்வர் இமானுவேல் ஆர்னோல்ட் உத்தரவிட்டுள்ளார்.
பேருந்து நிலையத்தை அபிவிருத்தி செய்யவுள்ளதால் , அதனை சூழவுள்ள தற்காலிக கடைகளை அகற்றுமாறு அதன் உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டு உள்ளது.
அவ்வாறு அகற்றப்பட்டது விடின் எதிர்வரும் முதலாம் திகதி மாநகர சபை கட்டளை சட்டத்திற்கு அமைவாக அவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார்.
Spread the love