பிரித்தானியாவின் தென்னாசிய திணைக்களத் தலைவரும் இந்திய ஒருங்கமைப்பாளரும் ஆகிய ஃபேர்கஸ் ஒளல்ட் மற்றும் இலங்கையின் உயர்ஸ்தானிகர் காரியாலயத்தின் முதல்செயலாளர் போல் ஃகிறீன் ஆகியோர் முன்னாள் வடமாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரனை இன்று (24.01.2019) காலை நீதியரசரின் வாசஸ்தலத்தில் சந்தித்துள்ளனர்.
இதன் போது சில முக்கியமான அடிப்படை விடயங்களைப் பெற்றுத் தருவதாக மக்களிடம் கூறி வாக்குப் பெற்று விட்டு அவை சம்பந்தமாக அரசாங்கத்துடன் கருத்துப் பரிமாற்றம் செய்யாது மிகவும் குறைந்த அளவு சில உரிமைகளைப் பெற இன்றைய தமிழ்த் தலைவர்கள் முயன்றுள்ளதால் அதை மக்களுக்கு எடுத்துக் காட்ட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக முன்னாள் முதலமைச்சர் விளமக்களித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் நடைபெறும் விடயங்களை மக்களுக்கு எடுத்துச் சொல்லா விட்டால் 2000 வருடங்களுக்கு மேலான தமிழ் மக்களின் பாரம்பரியமானது ஒரு சில வருடங்களில் இல்லாதொழிக்கப்படும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளதாகவும் தெரிவலிக்கப்பட்டுள்ளது
மேலும், தமிழர்களிடம் இருந்து பறிக்கப்பட்ட உரிமைகள் திரும்பவும் கையளிக்கப்பட்டதன் பின்னர் நாட்டின் அரசியல், சமூக, பொருளாதார நீரோட்டத்தினுள் உள்ளீர்க்கப்பட்டு செயலாற்ற முடியும் எனவும் விளக்கமளித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
1 comment
தமிழ் சுதந்திர போராட்டத்திற்கு எதிராக போராட மற்றய நாடுகளின் பங்களிப்புடன் இங்கிலாந்து அரசாங்கம், இலங்கை ஆயுதப் படைகளுக்கு பயிற்சி, பணம், ஆயுதம் மற்றும் ஆலோசனைகளை கொடுத்தார்கள். இதனால் தமிழர்களின் சுயாட்சி அழிக்கப்பட்டது.
இந்த நாடுகள் தங்கள் வளங்களை, ஆற்றல் மற்றும் நேரத்தை பாவித்து தமிழர்களின் சுய ஆட்சியை பாதுகாப்பதற்கு பதிலாக அழிக்க உதவினார்கள். தமிழர்கள் பேரழிவை சந்தித்தார்கள்.
இதை உணர்ந்து இனியாவது பகிரப்பட்ட இறையாண்மை அடிப்படையில் இருந்த சுய ஆட்சியை மீளமைக்க இந்த நாடுகள் உதவ வேண்டும். இதற்கான அழுத்தத்தை தமிழர்கள் கொடுக்க வேண்டும்.