192
சுந்தர்.சியின் இயக்கத்தில் சிம்பு – மேகா ஆகாஷ் நடித்துள்ள `வந்தா ராஜாவாதான் வருவேன்’ திரைப்படத்திற்கு தணிக்கைக் குழு யு சான்றிதழ் வழங்கியுள்ளமை படக் குழுவிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சுந்தர்.சி இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ படத்தின் படப்பிடிப்பு முடிந்து வெளியீட்டுக்கு தயாராகி இருக்கும் நிலையிலேயே, படத்திற்கு தணிக்கைக் குழுவில் `யு’ சான்றிதழ் கிடைத்துள்ளது.
இந்த படத்தில் சிம்புவிற்கு நாயகியாக மேகா ஆகாஷ் நடித்துள்ளார். அத்துடன் பிரபு, கேத்தரீன் தெரசா, மகத் ராகவேந்திரா, நாசர், ரம்யா கிருஷ்ணன், ரோபோ சங்கர், யோகி பாபு, மொட்ட ராஜேந்திரன், சுமன், ஸ்ரீரஞ்சினி, விடிவி கணேஷ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையில் பாடல்கள் இன்று வெளியகிறது. லைகா புரொக்ஷன்ஸ் தயாரித்துள்ள இந்த படம் பிப்ரவரி 1ஆம் திகதி திரைக்கு வருகிறது என்பதை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
Spread the love