இந்திய கிரிக்கெட் அணி வீரர்களான ஹர்திக் பாண்டியா மற்றும் கேஎல் ராகுல் ஆகியோர் மீதான தடை நீக்கப்பட்டுள்ளதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை அறிவித்துள்ளது. குறித்த இருவரும் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது பெண்களுக்கு எதிரான கருத்துக்களை கூறியதாக தெரிவிக்கப்பட்டிருந்ததனையடுத்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை அவர்கள் மீது தடை விதித்திருந்தது.
இதனையடுத்து அவர்கள் அவுஸ்திரேலியாவில் இருந்து உடனடியாக இந்தியா திரும்பியிருந்ததுடன் அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து தொடரில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டிருந்தது.
இந்நிலையில் இருவர் மீதான விசாரணை நிலுவையில் உள்ளதால் அவர்கள் மீதான தடையை உடனுக்கு நடைமுறைக்கு வரும் வகையில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை ரத்து செய்துள்ளது.
இதனையடுத்து இருவரும் நியூசிலாந்துக்கெதிரான தொடரில் விளையாடுவதற்காக நியூசிலாந்து புறப்பட்டுச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது