உத்தரபிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் அரசு பொறுப்பேற்றது முதல் 16 மாதங்களில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட என்கவுன்டர்கள் நடத்தப்பட்டு 78 பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
உத்தர பிரதேச மாநிலத்தில் யோகி ஆதித்யநாத் முதல்வராக பதவியேற்ற பிறகு தொடர்ந்து என்கவுன்ட்டர் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன எனவும் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகளை காவல்துறையினர் சுட்டுக்கொல்வதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த என்கவுன்டர் விவகாரம் அம்மாநிலத்தில் அரசியல் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ள நிலையில் அரசியல் எதிரிகளை பாஜக அரசு சுட்டுக்கொல்வதாக எதிர்க்கட்சியான சமாஜ்வாதி கட்சி விமர்சித்து வருகிறது.
இந்த நிலையில் குடியரசு தினத்தை முன்னிட்டு உ.பி அரசு தயாரித்துள்ள சாதனை பட்டியலில் என்கவுன்டரையும் இணைத்துள்ள நிலையிலேயே இவ்வாறு 16 மாதங்களில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட என்கவுன்டர்கள் நடத்தப்பட்டு 78 பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது