பிரிகேடியர் பிரியங்க பெர்ணான்டோவிற்கு எதிரான பிடியாணையை மறுபரிசீலனை செய்யுமாறு இலங்கை வெளிவிவகார அமைச்சு பிரித்தானியாவிடம் கோரிக்கை விடுத்துள்ளது
லண்டன் வாழ் தமிழர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்த இலங்கை தூதரகத்தின் முன்னாள் பாதுகாப்பு அதிகாரி பிரியங்க பெர்னாண்டோவிற்கு எதிராக லண்டன் நீதிமன்றினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த படியாணையை மறுபரிசீலனை செய்யுமாறே வெளிவிவகார அமைச்சு வேண்டுகோள் விடுத்துள்ளது
இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜேம்ஸ் டோரிசை சந்தித்து இந்த வேண்டுகோளை விடுத்துள்ள வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ரவிநாத் ஆரியசிங்க நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவு உட்பட பிரியங்க பெர்ணான்டோ குறித்து பின்பற்றப்பட்ட நடைமுறைகளை மறுபரிசீலனை செய்யுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும் பிரியங்க பெர்ணான்டோவிற்கு எதிராக வழங்கப்பட்டுள்ள பிடியாணை மற்றும் பிணையில்லாத பிடியாணை குறித்து சுட்டிக்காட்டியுள்ள ரவிநாத் ஆரியசிங்க இது சர்வதேச சட்டங்களிற்கு முரணானது எனவும் தெரிவித்துள்ளார்