612
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
போதை ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு நயினாதீவு மகாவித்த்தியாலய மாணவர்கள் போதை பொருளுக்கு எதிராக விழிப்புணர்வு பேரணியை நடத்தி இருந்தனர். நயினாதீவு மகா வித்தியாலயத்திற்கு முன்பாக மாணவர்கள் போதை பொருளுக்கு எதிராக இன்று காலை போராட்டத்தை ஆரம்பித்து பாடசாலையை சூழவுள்ள வீதிகளில் பேரணியாக சென்று விழிப்புணர்வு நடவடிக்கைகளிலும் ஈடுபட்டனர்.
மாணவர்கள் பேரணியாக செல்லும் போது போதை பொருளுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Spread the love