நிறைவேற்று அதிகார முறையை ஒழிக்கப் போவதாக சந்திரிக்கா, மகிந்த, மைத்திரி ஆகிய மூவரும் கூறியதாகவும், அதற்கான மக்கள் ஆணையைப் பெற்றுக்கொண்டபோதும் அதனை அவர்கள், நிறைவேற்றவில்லை என்று எதிர்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
தற்போது, மகாகாண சபைத் தேர்தலை நடத்துவதிலும், மாகாணங்களுக்கு அதிகாரங்களை பகிர்ந்தளிப்பதிலும் ஓர் உறுதியான நிலைப்பாடு எட்டப்பட வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
மாகாண சபைத் தேர்தலை நடாத்தக் கோரி டலஸ் அழகப் பெரும, பாராளுமன்றத்தில் பிரேரணை ஒன்றை கொண்டுவந்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மாகாண சபை அவசியம் என்றால், அது இயங்க வேண்டும் என்றால், அதற்கான சுதந்திரமான அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்ட மகிந்த அமரவீர மாகாண சபைத் தேர்தலை நடத்த ஒரு வருடமாக அரசு தாமதித்து வருவதாகவும் தாமும் புதிய தேர்தல் முறை ஒன்றை விரும்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.