297
மாவனல்லைப் பிரதேசத்தில் உள்ள வர்த்தக நிலையங்கள் சிலவற்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மாவனல்லை நகரத்தில் அமைந்துள்ள தற்காலிக வர்த்தக கட்டிடங்களில் இன்று அதிகாலை இவ்வாறு தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்தனர்.
மாவனல்லை காவற்துறையினர் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர்.
தீயினால் உயிர் சேதம் ஏற்படாத போதிலும் பாரிய பொருட் சேதம் ஏற்பட்டுள்ளதுடன், சேதவிபரம் இதுவரை மதிப்பிடப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ள காவற்துறையினர், மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
Spread the love