பிரேசிலில் அணை ஒன்று உடைந்துள்ளமையினால் 7 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதுடன் 150 பேரை காணவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரேசிலின் புரு மாடின்கோ நகரத்தின் அருகே உள்ள தனியாருக்கு சொந்தமான இரும்புதாது சுரங்கத்தில் ஒரு அணை பயன்படுத்தப்படாமல் இருந்த நிலையில் நேற்று இரவு அந்த சுரங்கத்தில் நூற்றுக்கணக்கான ஊழியர்கள் வேலை பார்த்துக் கொண்டிருந்த போது அந்த அணை உடைந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து அதில் இருந்த தண்ணீரும், சேறும் வெள்ளமாக பெருக்கெடுத்து வெளியேறியதனால் சுரங்கத்தில் பணியாற்றிக்கொண்டிருந்த 7 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதுடன் 150 பேரை காணவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் காணாமல் போனவர்களில் பலர் உயிரிழந்திருக்கலாம் எனவும் அச்சம் வெளியிடப்பட்டுள்ளது