190
அடுத்தவர்கள்மீது எப்போதும் அக்கறையோடு இருப்பதுதான் யோகி பாபுவிடம் தனக்கு மிகவும் பிடித்த விடயம் என்று குத்தூசி படத்தில் நாயகனாக நடித்துள்ள திலீபன் தெரிவித்துள்ளார். வத்திக்குச்சி படத்தில் கதாநாயகனாக நடித்த திலீபன் , காலா படத்தில் ரஜினிக்கு மகனாக நடித்துள்ளார்.. இவர் நடிப்பில் வெளியாகி இருக்கும் திரைப்படம் குத்தூசி. இயற்கை விவசாயம் பற்றிய இந்த படத்தில் யோகி பாபுவுக்கு முக்கியமான கதாபாத்திரம் வழங்கப்பட்டுள்ளது.
யோகி பாபு தொடக்க காலத்தில் நடித்த இந்த படம் இப்போது தான் வெளியாகவுள்ளது. யோகி பாபு பற்றி திலீபன் கூறும்போது, “அவர் ஒரு தீவிர முருக பக்தர். எல்லோர் மீதும் அதிக அக்கறை எடுத்துக்கொள்வார் என்று கூறியுள்ளார்.
மேலும் எல்லோரும் பரபரப்பா ஓடிக்கிட்டு இருந்தாலும், யாருக்கு என்ன தேவைன்னு கண்டுபிடிச்சு, அவங்களுக்குப் பண்ணணும்னு நினைப்பார். பிசியாக இருக்கிற ஒருத்தருக்கு தன்னுடைய வேலைகளைப் பார்க்கவே நேரம் சரியா இருக்கும். ஆனா, யோகி பாபு அடுத்தவங்க மேல அக்கறை எடுத்துக்கிறது எனக்கு ரொம்பப் பிடிக்கும்.” என்றுத் திலீபன் கூறியுள்ளார்.
Spread the love