தெற்கு பிலிப்பைன்ஸ் ஜோலோ தீவில் கத்தோலிக்க தேவாலயம் மற்றும் இராணுவ முகாமை குறிவைத்து மேற்கொள்ளப்பட்ட இரட்டைக் குண்டு வெடிப்பில் 19 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
இன்றையதினம் தெற்கு பிலிப்பைன்சில் உள்ள ஜோலோ தீவிலுள்ள ரோமன் கத்தோலிக் தேவாலயத்திற்கு அருகில் முதல் குண்டு வெடித்ததாகவும் சிறிது நேரம் கழித்து இராணுவத்தினர் தங்கியிருந்த முகாம் அருகில் மற்றொரு குண்டு வெடித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் இராணுவத்தினர் மற்றும் பொதுமக்கள் என 19 பேர் உயிரிழந்துள்ளடன் 48 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து குண்டு வெடிப்பு நடைபெற்ற இடத்தில் பாதுகாப்பை அதிகரிக்கவும் பொதுமக்கள் கூடும் இடம் மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு உச்சக்கட்ட பாதுகாப்பு வழங்கவும் அந்நாட்டு பாதுகாப்பு செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.
இந்த தாக்குதலுக்கு எந்தவொரு அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது